மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்!!

0
36

 

மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்…

 

மழை பெய்ய வேண்டி குலதெய்வத்திற்கு மக்கள் வழிபாடு செய்துள்ளனர். இதை அடுத்து 2 மணி நேரத்தில் வேண்டுதலுக்கு பலனாக மழை பெய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

 

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் அருகே உள்ள சாலூர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்ததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமலும் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

 

இதையடுத்து அப்பகுதி மக்கள் மழை பெய்ய வேண்டும் என்று நினைத்து தங்களின் குல வழக்கப்படி குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யலாம் என்று முடிவு செய்தனர். மண்சோறு சாப்பிட்டால் மழை பெய்யும் என்பது அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் நம்பிக்கை ஆகும்.

 

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வடக்கில் உள்ள மலைப் பகுதிக்கு அந்த மக்கள் சென்றனர். பின்னர் மழை பெய்ய வேண்டி சாலூர் பகுதி மக்கள் குலதெய்வம் ஜக்கம்மாவிற்கு பொங்கல் வைத்து கோழி, ஆடுகளூ பலியிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

 

பின்னர் ஜக்கம்மாவிற்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை வரிசையாக மண்ணில் வைத்து மக்கள் அனைவரும் மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டனர். இந்த வேண்டுதல்களை எல்லாம் முடித்து விட்டு திரும்பி பார்க்காமல் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

 

மக்கள் வீடுகளுக்கு திரும்பா வந்து 2 மணி நேரம் கழித்து சாலூர் பகுதி முழுவதும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதிலும் பலத்த மழை பெய்தது. இந்த அதியசத்தை பார்த்த மக்கள் கடவுள் தங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டதாக பரவசம் அடைந்தனர்.