பெண்களிடம் ஆபாச சைகைகள்!! போலீசாரிடம் வசமாக சிக்கிய ரோமியோ!!

Photo of author

By Savitha

பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி வந்த ரோமியோ அதிரடிப்படை போலீசிடம் சிக்கினான். பல நாட்களாக தொடர்ந்த சம்பவத்திற்கு இன்று முடிவு கட்டப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 40 வயதாகும் இவர் தற்போது நாகர்கோயில் பள்ளி விளை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர், தற்போது வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில் பார்வதிபுரம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில தினங்களாக காலை நேரத்தில் அதிகமான பெண்கள் பேருந்துக்காக காத்து நிற்கும் வேலையில் இவர் நேரம் தவறாமல் சென்றுள்ளார். அங்கு நிற்கும் பெண்கள் தன்னை பார்க்கும் வகையில் நின்று கொண்டு ஆபாச சைகைகளை காண்பித்து பெண்களுக்கு தொல்லை அளித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிய வரவே, பெண் போலீசார் கொண்ட அதிரடிப்படைக்கு இவரை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அங்கு சென்ற அதிரடிப்படையினர் ஸ்டீபனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து ஆசாரி பள்ளம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

நீண்ட நாட்களாக பெண்களுக்கு ஆபாச தொல்லை அளித்து வந்த ரோமியோ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.