சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது : காவல்துறை அதிரடி நடவடிக்கை!

0
173

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பறித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது.

இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார்.

இதைப் பொருட்படுத்தாத பொது மக்கள் பொழுதுபோக்க சாலையில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்தது. அவ்வாறு சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

புதுச்சேரியில் எச்சரிக்கையையும் மீறி வீதிகளில் அலட்சியமாக சுற்றி திரிந்தவர்களை பிடித்த காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42 பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த நடவடிக்கையை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Previous articleகொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு
Next articleஇங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் உலக தலைவர்கள்!