வெறும் 5 நிமிடம் போதும்.. இந்த வெயிலுக்கு டேஸ்டியான ரோஸ் மில்க் தயார்..!

0
329
Rose Milk recipe in tamil
#image_title

Rose Milk Recipe In Tamil: இந்த வெயிலுக்கு அனைவரும் பல்வேறு பழங்களில் பானகங்கள் தயார் செய்து குடித்து வந்தாலும், அனைவரின் விருப்ப தேடலில் முதலில் இருப்பது இந்த ரோஸ் மில்க் தான். ரோஸ் மில்க் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வாங்கி அதிகமாக குடிக்கும் பானங்களில் ஒன்று தான் இந்த ரோஸ் மில்க். இந்த ரோஸ் மில்கை சுவையான முறையில் வீட்டிலே எளிமையாக 5 நிமிடத்தில்  எப்படி செய்வது என்று இந்த பதிவில் (How To Make Rose Milk in Tamil) பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ரோஸ் மில்க் எசன்ஸ் – 5 முதல் 6 ஸ்பூன்
  • பால் – 1/2 லிட்டர்
  • பால் பவுடர் – 1/2 ஸ்பூன்
  • சர்க்கரை – தேவையான அளவு
  • பாதம் பிசின் – 1

செய்முறை

  • முதலில் பாதம் பிசினை முதல் நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் நன்றாக ஊறிவந்திருக்கும். விருப்பப்பட்டால் பாதம் பிசின் சேர்த்துக்கொள்ளலாம்.
  • அடுத்தப்படியாக எடுத்து வைத்துள்ள பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ள வேண்டும். பால் காய்ச்சி எடுத்ததும், அதனை முழுவதுமாக ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த பாலை மிக்ஸி சாரில் சேர்த்து அதனுடன் பால் பவுடரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு இதனை ஒரு கிளாஸில் மாற்றி அதில் ரோஸ்மில்க் எசன்ஸ், ஐஸ் கட்டிகளை சேர்த்தால் சுவையான வெறும் 5 நிமிடத்தில் சுவையான ரோஸ் மில்க் (Rose Milk Seivathu Eppadi) தயார்.

Previous articleஇந்த 3 இலை இருந்தால் சிறுநீரகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கல்லும் நீங்கும்!! இனி ஆயுசுக்கும் மருந்து மாத்திரை தேவையில்லை!!
Next articleஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?