கர்ணனுக்காக சிறைக்கு சென்ற ரவுடிகள்! தோசைக்கு உரிமைக்குரல்!

கர்ணனுக்காக சிறைக்கு சென்ற ரவுடிகள்! தோசைக்கு உரிமைக்குரல்!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் கர்ணன்.தனுஷ் ரசிகர்கள் அப்படத்துக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளிப்பளையம் தேவி திரையரங்கில் கர்ணன் படம் பார்ப்பதற்கு நண்பர்களுடன் சென்றுள்ளனர்.கர்ணன் படம் பார்ப்பதற்கு முன் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று அங்குள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.அங்கு சென்றவர்கள் சாப்பிடுவதற்கு தோசையை ஆர்டர் செய்துள்ளனர்.

அங்கு இருந்த சப்ளையருக்கு அவர்கள் தோசை என்று கூறி ஆர்டர் செய்தது சரியாக கேட்கவில்லை. இதனால் அவர்கள் ஆர்டர் செய்த தோசையை பக்கத்துக்கு டேபிளுக்கு கொடுத்துள்ளார்.இதனால் அதிகம் கோபமடைந்த கர்ணன் பட ரசிகர் அந்த சப்ளையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது நான் கர்ணன் படத்திற்கு செல்ல வேண்டும் என்று விரைவாக தோசையை எடுத்து வரும்படி தானே தோசையை ஆர்டர் செய்தேன்.ஆனால் எனக்கு தோசையை கொடுக்காமல் பக்கத்து டேபிளுக்கு எப்படி கொடுக்கலாம் என்று வாக்கு வாதம் செய்தார்.

அதன்பின் அங்கு வேலை செய்த ஊழியரோ நீங்கள் கூறியது எனது காதுக்கு கேட்கவில்லை என்று கூறியுள்ளர்.இந்த பதிலை கேட்டதும் அதிகம் கோபமடைந்த கர்ணன் பட ரசிகர் அவர் வைத்திருந்த கத்தியால் அந்த ஊழியரின் காதை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.அவர் அறுத்ததில் அந்த ஊழியரின் காது இரண்டாக கிழிந்தது.அதன்பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.காவல் துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி கண்டுபிடித்தனர்.

காவல்துறை விசாரணையில் அந்த கர்ணன் பட ரசிகர்கள் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான ஒன்றை அருண்குமார்,சப்பை சிவா என்பது தெரிய வந்தது.அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.கர்ணன் படம் பார்க்கும் ஆவலில் கத்தி சண்டை நடத்தியவர்களை காவல் அதிகாரிகள் ஜெயிலுக்குள் அனுப்பினர்.

Leave a Comment