திகார் சிறையில் ரவுடி கொலை!! தமிழக போலீசாரை விசாரிக்க உத்தரவு!!
கடந்த 2 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா அவனது எதிரிகளால் அடித்து கொலை செய்யப்பட்டான். தாஜ்பூரியா மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் தாஜ்பூரியா திகார் ஜெயிலுக்கு வந்ததாகவும், அதற்கு முன் மண்டோலி சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்பகை காரணமாகவே, தாஜ்பூரியாவை அவனது எதிரியான ரவுடி ஜிதேந்தர் கோகியின் கூட்டத்தை சேர்த்த யோகேஷ் துண்டா மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து அடித்து கொன்றனர். அப்போது பக்கத்தில் இருந்த காவலர்களை சென்றுவிடும் படி கூறியுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிசிடிவி காட்சிகளில் இருந்த காவலர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதில் தாஜ்பூரியாவை கொல்லும் போது தடுக்காமல் கிட்டத்தட்ட 10 போலீசார் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திகார் சிறை நிர்வாகம் 30 உதவி கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் சஸ்பெண்டு ஆகி தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மிகுந்த திகார் சிறையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை சம்பவம் பற்றிய அறிக்கையை, திகார் சிறை நிர்வாகம், டெல்லி துணை நிலை கமிஷனருக்கு அனுப்பி உள்ளது.