Crime, District News

காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு!

Photo of author

By Hasini

காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு!

Hasini

Button

காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு!

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில், ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக இவரின் பெயரை ரவுடிகளின் பட்டியலில் காவல்துறையினர் வைத்துள்ளனர். மேலும் இந்த நபரை வலைவீசி தேடியும் வந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தி அவரின் வீட்டில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ராமமூர்த்தியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு ராமமூர்த்தி காவல்துறையினரை பார்த்ததும் திடீரென அங்கிருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராமமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனைப் போலவே கடந்த ஆண்டு இவரை பிடிக்க காவல்துறையினர் சென்றனர். அப்போதும் அவர் கத்தி எடுத்து தன் விரலை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். எனவே காவல் துறையினர் மீண்டும் ராமமூர்த்தியை பிடிக்கும் போது தற்கொலை செய்ய முயன்றதாக அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்!

செல்போனை உளவுப்பார்க்கிறதா மத்திய அரசு? கொந்தளித்த முக்கிய நபர்!

Leave a Comment