செல்போனை உளவுப்பார்க்கிறதா மத்திய அரசு? கொந்தளித்த முக்கிய நபர்!

0
61

கோயம்புத்தூரில் இருக்கின்ற பெரியார் படிப்பகத்தில் மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளின் தொலைபேசியை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு பெகாஸஸ் என்ற செயலியின் மூலமாக உளவு பார்த்து இருக்கின்ற தகவல் அம்பலமாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் செயலியின் மூலமாக 50 க்கும் அதிகமானோரின் செல்லிடப்பேசி மற்றும் கணினிகளை மத்திய அரசு உளவு பார்த்து இருக்கிறது. அதே போல செல்லிடப்பேசியில் இருந்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், வாட்ஸ் அப் உரையாடல், கைபேசியில் உரையாடியது போன்றவற்றை திருடி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தேசிய அளவில் ஒயர் என்ற ஊடகம் மூலமாக தகவல் வெளியாகி இருக்கின்றது. பல ஊடகத்தின் பத்திரிகையாளர்கள் செல்லிடப் பேசிகள் கூட உளவு பார்க்கப்பட்டு இருப்பதாகவும், சென்ற மூன்று வருடத்திற்கு முன்னதாக இதை போல உளவு பார்த்து பொய்யான தகவலை மத்திய அரசு பதிவு செய்து வைத்திருக்கும் அதிகமானோரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. பெகாஸஸ் என்ற செயலியின் மூலமாக மத்திய அரசு இவ்வாறு உளவு பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் திருமுருகன் காந்தி.

இதன் வழியாக இன்றைய தினம் என்னுடைய தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்ட இருக்கிறது. மக்களுக்காக போராடும் எங்கள் மீது மத்திய அரசு உளவு பார்க்கும் வேலையை எதற்காக முடுக்கிவிட வேண்டும். இது தனியார் அரசியல் சாசனத்திற்கு எதிரானது இதனை அனுமதித்தோம் ஆனால் உளவு பார்க்கும் செயலி மூலமாக பொய்யான தகவலை எங்களுடைய கைபேசியில் பதிவு செய்து எங்களை சிறையில் அடைக்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றார்.

சுமார் 40 திற்கும் அதிகமான நாடுகளில் 1500க்கும் அதிகமான நபர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது. என்னுடைய தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. இது கண்டனத்திற்கு உரியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி நான் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார் இதற்கு முன்னதாக மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து செய்திகள் வெளியானவுடன் பெகாஸஸ் செயலி விவகாரம் தொடர்பாக வைக்கப்பட்ட குற்றசாட்டை முற்றிலுமாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.