ஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு!
இந்த காலக்கட்டத்தில் டெக்னாலஜி வளர்சிகேற்ப ஓர் பக்கம் மோசடி கும்பலும் வளர்ந்து வருகிறது.அந்தவகையில் இந்த மோசடி கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.ஆனால் இன்றளவும் சில மக்களின் அஜாக்ரதையினால் பல மோசடி கும்பலிடம் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.அந்தவரிசையில் முன்னால் கல்வி அலுவலர் ஓர் பெண்மணி சிக்கிக்கொண்டார்.
சேலத்தை சேர்ந்த முன்னால் கல்வி அலுவலர் பெண்மணி ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சேலம் இரும்பாலையிலுள்ள கொரோனா முகாமில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவரது கணவர் கொரோனா தொற்று உறுதியாகயுள்ளதால் அப்பெண்மணி பல குழப்பத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில் இவரது வீட்டிலுள்ள லேன்ட் லைன் எண்ணிற்கு ஓர் அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பில் நாங்கள் எஸ்பிஐ வங்கியில் இருந்து தொடர்பு கொண்டுள்ளோம்.உங்களின் அக்கவுண்ட் புக் மற்றும் ஏடிஎம்-ஐ புதிபிப்பதற்காக உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளனர்.இந்த பெண்மணியும் அவர்கள் எஸ்பிஐ வங்கியிலிருந்து தான் அழைத்துள்ளனர் என நம்பியுள்ளார்.அதனையடுத்து அந்த மோசடி கும்பல் இதனை அனைத்தும் புதிபிப்பதற்கு ஏடிஎம் எண் மற்றும் வரும் ஓடிபி யை கேட்டுள்ளனர்.
இந்த பெண்மணியும் அவர்கள் கேட்ட ஒடிபி மற்றும் ஏடிஎம் எண் போன்றவற்றை தந்துள்ளார்.அளித்த அறை மணி நேரத்திற்குள்ளேயே இந்த பெண்மணியின் வைப்பு நிதியிலிருந்த ரூ.10 லட்சம் ரூபாயும் வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த பெண்மையின் தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.அதனை பார்த்த அந்த பெண்மணி பெருமளவு அதிர்ச்சியடைந்துள்ளார்.அதனையடுத்து அந்த பெண்மணி வங்கிக்கு சென்ற கேட்டுள்ளார்.அப்போது அந்த வங்கியில் பணி புரிபவர்கள் இனி உங்கள் பணம் கிடைக்காது என்று நீங்கள் சென்று போலீசாரை சந்தியுங்கள் என அழைக்களித்துள்ளனர்.
அந்த பெண்மணி அதனையடுத்து சைபர் க்ரைமிடம் புகார் அளித்துள்ளார்.அந்த மோசடி கும்பலிடம் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு அந்த பெண்மணி தவிக்கிறார்.மக்களுக்கு அரசாங்கம் பலவித விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் மக்கள் இவ்வாறு சில மோசடி கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றனர்.அதேபோல பணத்தை பறிகொடுத்த மக்கள் வங்கியிடம் வந்து தங்களது கோரிக்கைகளை கூறும்போது அழக்களிப்பதும் வேலையாகவே செய்து வருகின்றனர்.அவ்வாறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் கூறி வருகின்றனர்.மக்கள் இவ்வகை மோசடி கும்பலிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.