குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை!! வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் !!
திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு முதலில் குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்பு திமுக அரசு ஆட்சி அமைத்த பின் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வந்தது.
அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நடைமுறைக்கு வராத நிலையில் இருந்தது. தமிழக அரசால் இந்த திட்டம் நடைமுறை படுத்த படுவதாக அறிவித்த நிலையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்பு குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 என்ற உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நடைமுறை படுத்துவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
இந்த திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கின்ற நிலையில் இது குறித்து தகுதி உடையவர்களின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.நேற்று அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் படி உதவி தொகை ரூ. 1000 வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை விரைவில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கு தகுதி உடையர்கள் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள் ,வீடுகளில் வேலை செய்யும் பெண்கள், கட்டுமானத்தில் பணிபுரியும் பெண்கள்,கூலி தொழில் செய்யும் பெண்கள் மற்றும் சிறிய கடைகளில் வியாபாரம் செய்யும் பெண்கள் போன்ற வேலை செய்யும் மகளிர் அனைவரும் இந்த உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதி உடையவர்கள்.