அரசு ஓட்டுனர்களுக்கு ரூ 1000.. போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழ்நாடு பேருந்து ஓட்டுனர்களுக்கும் தமிழக அரசு சார்பாக நிவாரண தொகை ஆயிரம் வழங்குவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இது பொய்யான செய்தி இதனை யாரும் நம்ப வேண்டாம் என போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார்.
மேற்கொண்டு அவர் கூறியதாவது, ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சென்னை 34 என்ற அடிப்படையில் தமிழக அரசு சார்பாக ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்குவதாக தெரிவித்ததோடு இதனை பெறுவதற்கு அனைத்து ஓட்டுனர்களும் தங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் உங்களுடைய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறான எந்த ஒரு நிவாரணத் தொகையும் தமிழக அரசு வழங்குவதாக தெரிவிக்கவில்லை எனவே இது பொய்யான தகவல் என்று போக்குவரத்து துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
எனவே போக்குவரத்து ஊழியர்கள் இதனை நம்பி தனது ஆவணங்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். மேற்கொண்டு இதுபோல பொய்யான தகவல்கள் பார்ப்பவர்கள் மீது காவல்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.இவ்வாறான அதிகாரப்பூர்வ தகவல்கள் முறையாக வெளி வராமல் இந்த வதந்திகளை நம்பி பலரும் ஏமாற்றம் அடைவதோடு இதன் மூலம் தங்களது தனிப்பட்ட ஆவணங்களையும் வழங்கி தங்களது பணத்தையும் இழக்கும் நிலை வந்துவிடுகிறது.