மகளிர் உரிமை தொகை திட்டமானது முதல் முதலில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நிலையில் அதனை பின்பற்றக்கூடிய மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாவட்டங்களில் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதற்கு முன்னோடியாக விளங்கக்கூடிய தமிழக அரசு தமிழக மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கி வருகிறது. மேலும் அடுத்த வருடம் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையானது உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
2026ல் நடக்க இருக்கக்கூடிய சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வழங்கக்கூடிய வாக்குறுதிகளை நினைவில் கொண்டு திமுக அரசு மகளிர் உரிமை தொகையை உயர்த்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் வரும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
மகளிர் உரிமைத்தொகை கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து தற்பொழுது வரையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோருக்கெல்லாம் இந்த திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இன்றளவும் பென்ஷன் பெறக்கூடிய பெண்கள் மற்றும் அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெறக்கூடிய பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கும் இந்த திட்டத்தின் விரிவாக்கம் செய்யப்படும்போது மகளிர் உரிமை தொகை அதிகரிப்பதற்கான அறிவிப்புகளும் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இன்னும் சிறிது நாட்களில் இத்திட்டத்தின் விரிவாக்கமானது செய்யப்படும் என்றும் அப்பொழுது புதிதாக குடும்ப தலைவி ஆனவர்கள் ஆவணங்கள் சரியில்லாத பெண்கள் ஆகியோரெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்பொழுது 2026 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக முன்னதாகவே தொடங்கியுள்ளது. மற்றொரு பக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை தள்ளிப் போடுவது குறித்த முடிவுகளும் எடுக்கப்படாமல் இருக்கிறது. மீண்டும் ஆட்சியை அமைப்பதற்காக மகளிர் உரிமை தொகையை திட்டத்தில் விரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.