தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.1000 – நிதி அமைச்சர்! பட்ஜெட் தாக்கல்!

0
162

வரலாற்றில் மிகவும் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்துள்ளார். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக பொறுப்பு ஏற்றபின் முதல் முறையாக நடக்கும் பட்ஜெட் தாக்கல் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை தொடங்கினார்.

  1. இந்த வரவு செலவு அறிக்கை இந்த நிதி ஆண்டில் 6 மாதங்களுக்குப் பொருந்தும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அதை படிப்படியாக நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார். அதன்படி வாக்குறுதிகள் சொல்லப்பட்டது போல அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  2. தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், அதற்கென தனியான அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும் என்று சொல்லியுள்ளது.
  3. சட்டமன்ற ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும். வெளிப்படைத்தன்மை சமூக ஈடுபாடு வல்லுனர்கள் கருத்து ஆகியவை நடவடிக்கை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசு செயல்படும் என்றும் சொல்லியுள்ளது.
  4. அரசு சார்ந்த வழக்குகளை கையாள்வதற்காக வழக்கு இடர் மேலாண்மை என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
  5. நமது தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கி அதை நடைபெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80 கோடியும் தொல்லியல் துறைக்கு 29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. காவல்துறைக்கு 8930 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மீதமுள்ள 14,317 காலி பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்யப்படும்.
  7. ஊரக வேலை உறுதி திட்ட பணி நாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்கள் ஆக உயர்த்த வலியுறுத்தப்படும் என்று சொல்லியுள்ளது.
  8. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை உருவாக்கப்படும்.
  9. பேருந்தில் மகளிர் இலவசமாக பயணிக்க டீசல் மானியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களின் கணினி திறனை ஊக்குவிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
  10. இந்த நடப்பு ஆண்டில் கலை அறிவியல் கல்லூரிகள் அதிகமாக தொடங்கப்படும்.
  11. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  12. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்கள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  13. இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும் என்று சொல்லியுள்ளது. அதனால் குடும்ப தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி கிடைக்கும் என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது .குடும்ப தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை என்று சொல்லியுள்ளது.
  14. ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்.

இவ்வாறு மேலும் பல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 

Previous articleஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு!
Next articleஅரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.!