அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.!

0
134
Govt officers asking money for free houses in chennai
Govt officers asking money for free houses in chennai

அரசு ஒதுக்கும் வீட்டிற்க்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? சென்னையில் அவலம்.!

சென்னை புளியந்தோப்பு கே.பி.பி. பார்க் பகுதியில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் குடியேறுவதற்கு பயனாளர்களிடம் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் பணம் கேட்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு பணம் கேட்பது தவறானது என்று தங்கள் பக்க நியாயத்தை முன்வைக்கின்றனர் பயனாளர்கள்.கடந்த டிசம்பர் மாதத்தில் குடிசைமாற்று வாரியத்தால் இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது.

புதிய வீட்டில் குடியேறுவதற்கு மின் இணைப்பு,குடிநீர் இணைப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு பயனாளர்களிடம் ஒன்றரை லட்சம் பணம் கேட்கின்றனர் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள்.கழிவுநீர் குடியிருப்பைச் சுற்றி தேங்கியுள்ளதால் அதனை சரி செய்யவும் பணம் கேட்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.2017ம் ஆண்டே இந்த வீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பயனாளர்கள் தங்களால் அவர்கள் கேட்கும் பணத்தைத் தர முடியாது எனவும் வெளிப்படையாக கூறுகின்றனர்.தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும்,அந்த வாடகைப் பணத்தை கொடுப்பதற்கே கஷ்டப்படுவதாகவும் குடிசைமாற்று வாரியம் கேட்கும் இந்த பணத்தை கொடுக்க தாங்கள் தனியார் வங்கிகளிடம் கடன் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.வீடுகள் ஒதுக்கப்பட்டபோது டோக்கன் வழங்கியதாகவும் அப்போது பணத்தைப் பற்றி எதுவும் தங்களிடம் சொல்லவில்லை எனவும் பயனாளர்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் இணைப்பும் மின் இணைப்பும் வீடுகளில் இருந்தால் தாங்கள் இப்போதே குடியேறிவிடுவோம் என்றும் இணைப்புகள் இல்லாததால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் பயனாளிகள்.மேலும் குடியிருப்பைச் சுற்றி கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.இந்த பிரச்சனைகளை எல்லாம் அரசு கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் அந்த பயனாளிகள்.