ஜூலை மாதம் முதல் இவர்கள் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரப்போகுது!! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!
தமிழகத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகளால் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக 12 ஆம் வகுப்பிற்கு பிறகு மேற்படிப்பை தொடரமுடியாமல் போய்விடுகிறது.இதனால் அவர்களின் எதிர்கலாம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மாணவிகள் தங்கள் மேல்படிப்பை தொடர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ‘புதுமைப் பெண்’ என்ற உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்” என்ற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்” திட்டம் போல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பை தொடர இருக்கு மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் அவர்களது வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் 2024-2025 நிதியாண்டிற்க்குனா தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த திட்டம் வருகின்ற ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக மாணவ மாணவிகளுக்கான கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியில் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார்.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது.விரைவில் இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.