இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை காட்டும் நோக்கில் அனைவர் வீட்டிலும் மூன்று நாட்கள் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என கூறினார். அதன்படி நாட்டு மக்கள் பலர் தங்கள் வீட்டின் முன் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வந்தனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ள காஞ்சி மாவட்டத்தில் சிலர் கொடியை ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியை ஏற்ற முயற்சித்த நிலையில், மின்சாரம் தாக்கி இறந்தது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. அதனால் அம்மாநில அரசு இவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. தேசியக்கொடி ஏற்றும் போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தது.
இந்த மூவரும் தேசியக்கொடியை ஏற்ற உலோக கம்பியை பயன்படுத்தி உள்ளனர். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது அங்கு இருந்த உயர் அழுத்த கம்பியின் மீது இந்த உலோக கம்பி உரசி உள்ளது. இவ்வாறு இரண்டு கம்பிகளும் உரசியதால் அதனைப் பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டனர். அதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 15 லட்சமும், ஒப்பந்தம் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.