தமிழக அரசு மகளிர் உரிமை தொகையாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்குவது போல தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவங்கி இருக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும் யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து திருநங்கைகளுக்கும் உரிமை தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தில் திருநங்கைகள் பயன்பெற தேவையான தகுதிகள் :-
✓ 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
✓ திருநங்கை வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
✓ ஆதார் அட்டை
✓ வயது சான்றிதழ்
✓ இருப்பிடச் சான்றிதழ்
✓ குடும்ப அட்டை
✓ குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கையாக இருத்தல் அவசியம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகம் சென்று மேல் கூறப்பட்ட ஆவணங்களை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின் ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய வங்கி கணக்கில் 1500 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும்.