புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகள்!! 75 சதவீதம் திருப்ப பெற்ற மத்திய அரசு!!
பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த ரூ 2000 நோட்டுகள் மூன்றில் இரண்டு பங்கு சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக கடந்த 19 ம் தேதி அறிவித்திருந்தது.
திரும்ப பெரும் ரூ 2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த இந்திய ரிசார்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மார்ச் மாதம் 31 ம் தேதி மட்டும் ரூ 3.62 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் பயன்பாட்டில் இருந்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்புடைய ரூ 2.41 லட்சம் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டது.
பெறப்பட்ட ரூ 2000 நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிகளில் செலுத்தப் பட்டதன் காரணமாகவும் மீதம் உள்ள 15 சதவீதம் வேறு நோட்டுகள் வாகங்கப்பட்டதன் காரணமாகவும் பெறப்பட்டது.
இது நாட்டின் நிதி நிலைமையை மாற்றி பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் சற்று குறைந்து தற்பொழுது 4.25 சதவீதமாக உள்ளது.
அந்த பணவீக்கம் 4.25 சதவீத குறைந்தால் 4 சதவீத வட்டி குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய ரிசரிவ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 6.5 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் கொடுப்பதன் மூலம் 16 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.