பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்கள் ஒன்றான பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 19வது தவணை முறை பணமானது இந்த மாதம் 24 ஆம் தேதி விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியாக 2000 ரூபாய் விவசாயிகளினுடைய வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டுக்கான முதல் தவணை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்தில் உங்களுடைய பெயரும் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றவும்.
பி எம் கிஷான் திட்டத்தில் பயன் பெற நீங்கள் தகுதியானவர்களா என்பதை தெரிந்து கொள்ள இதனை மேற்கொள்ளுங்கள் :-
✓ டி எம் கிஷான் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைதளமான pmkisan.gov.in என்ற வலைதள பக்கத்தில் நுழைய வேண்டும்.
✓ இந்த பக்கத்தில் தமிழில் நுழையும் பொழுது விவசாயிகளின் மூலை என இருக்கக்கூடிய பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
✓ அதற்குள் பி எம் கிஷான் 19 இன்ஸ்டால்மென்ட் பெனிபசரி லிஸ்ட் என்பதனை கிளிக் செய்ய வேண்டும்
✓ இந்த பக்கத்தினுள் உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடைய தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.
✓ அதன்பின் கெட் ரிப்போர்ட் என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய விவரங்கள் வந்து சேரும்.
கிடைக்கும் தரவுகளில் உங்களுடைய பெயரிடம்பெற்று இருக்கிறது என்றால் பிப்ரவரி 24ஆம் தேதி உங்களுடைய வங்கி கணக்கிலும் பி எம் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் நீங்களும் 2000 ரூபாய் பெறுவதற்கான தகுதியுடையவர் ஆவீர்.