சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.25,000 பரிசு!! மத்திய அரசு!!

0
97
Rs.25,000 reward for hospitalizing road accident victims!! Central Govt!!
Rs.25,000 reward for hospitalizing road accident victims!! Central Govt!!

சாலை விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு இதுவரை 5000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 5 மடங்காக உயர்த்தி 25,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நடிகர் அனுபம் கேர் இருவரும் கலந்துரையாடிய பொழுது, அமைச்சர் சாலை விபத்தில் சிக்கியவர்களை 1 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதன் மூலம் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்பவர்களுக்கு இதுவரை 5000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்றும் அதனை தற்போது 5 மடங்காக உயர்த்தி 25,000 ரூபாய் வழங்க வேண்டுமென சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

சாலை விபத்துகளில் மாட்டிக் கொள்ளும் பயணிகளை பொதுமக்கள் எந்தவித ஐயமும் இன்றி காப்பாற்ற அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது என்றும், துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இதற்கான ஊக்க தொகையாக 5000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தற்பொழுது அதனை 25000 ரூபாயாக உயர்த்தி தர உத்தரவிட்டிருப்பதாகவும் சாலை போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை!! இதெல்லாம் ஒரு காரணமா!!
Next articleவெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்!!முதல்வர் அறிவிப்பு!!