32 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரியக்கூடிய ஊழியர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய தணிக்கை தொகை 257 கோடி ரூபாய் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் சிலுவையில் இருந்த தணிக்கை தடைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக, அனைத்து அரசு துறைகளிலும் ஆண்டுதோறும் தணிக்கைகள் பெறப்படுவது வழக்கம். ஆனால் சத்துணவு துறையில் மட்டும் தணிக்கைகளை பெறுவதற்கான புதிய ஆவணங்கள் இல்லை என்பதாலும் ஊழியர்கள் முறையாக செயல்படவில்லை என்பதாலும் தணிக்கை தொகை மற்றும் பல்வேறு தணிக்கை தடைகள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக நலத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன் இது போன்ற கடந்த 32 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தணிக்கை தடைகளை ரத்து செய்வதாக தெரிவித்திருக்கிறார். காரணம் என்ன தணிக்கை தடைகளை விசாரித்து முடிவு செய்வதற்கு போதிய ஆவணங்கள் இல்லை என்பதே. மேலும் இது குறித்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமை தணிக்கை இயக்குனர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு கால தாமதம் மற்றும் பணி இடை நீங்கி செல்லல் மற்றும் சரிவர வேலை பார்க்காத ஊழியர்கள் என பல்வேறு காரணங்கள் இந்த தணிக்கை தடைகளை விசாரிக்க முடியாமல் செல்வதற்கு காரணமாக அமைந்திருப்பதாக தங்களுடைய அறிக்கைகளில் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது 1982 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இந்த சத்துணவு துறையானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இடம் செயல்பட்டு வந்ததாகவும் அதன் பிறகு சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சத்துணவு துறை பொறுத்தவரையில் ஆரம்ப காலம் தொட்டு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்ததால் தணிக்கை தொகையை பெறவும் அல்லது தணிக்கை தடைகளை தீர்க்கவோ முடியாமல் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது போன்ற காரணங்களை விசாரித்து அதன் பின்பு கடந்த 32 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து தணிக்கை தொகையான ரூ.257,83,10,289 மொத்தத்தையும் தள்ளுபடி செய்வதாகவும் அதன் பின்பு நிலுவையில் இருந்த தணிக்கை தடைகளான 25,588 போன்றவற்றையும் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.