2800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கட்டணமில்லா பேருந்து வசதிக்கு!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதலவர் தேர்தல் வாக்கு உறுதியாக பெண்கள் பேருந்தில் இலவசமாக செல்லாலம் என்று அறிவித்திருந்தார்.
மேலும் இது மட்டுமின்றி முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், கைப்பெண் மறுமண உதவித் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், திருமண உதவித் திட்டம், இலவச தையல் இயந்திர வழங்கும் திட்டம் , பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் இது போன்று பல திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை மு.க ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அறிவித்தார். அதனை தொடர்ந்து மே மாதம் 8 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் லச்சக்கணக்கான பெண்கள் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் இதற்காக மாநகர பேருந்துகளில் 74 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இதன் மூலம் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. தற்போது வரை மாநிலம் முழுவதும் 9,620 நகர பேருந்துகள் இயக்கபப்ட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 49.07 லட்சம் பேர் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். மேலும் இந்த ஆண்டு மட்டும் மகளிர் கட்டணமில்லா பேருந்து வசதிக்கு 2800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.