இனி வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ 3 ஆயிரம்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
167
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!
SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இனி வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ 3 ஆயிரம்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

வரும் மாதங்களில் 40 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பல கட்சிகள் மக்களுக்கு பல அறிக்கைகளை கூறி வருகிறது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் மக்களுக்கு பல அறிக்கைகளை கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

மேலும் வேலை கிடைக்கும் வரை வேலை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மக்கள் மத்தியில் இந்த அறிவிப்புகள்  அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதேபோல 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மக்களுக்கு தரமான கல்வி மற்றும் மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இம்முறை கோவாவில்  ஆம் ஆத்மி கட்சியின்  ஆட்சி நடைபெறுமாயின் கட்டாயம் ஊழலற்ற மாநிலமாக கோவா மாற்றப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இத்தோடு இலவச மின்சாரம் , இலவச குடிநீர் சேவை என பல அறிக்கைகள் தங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறி வருகின்றனர். இவர்களின் இந்த அறிக்கை காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்கிடையே பெரும் போட்டியாக இருக்கும். ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்புகள் மக்களின் ஓட்டுகள் அவர்கள் பக்கம் திரும்பும் என பேசி வருகின்றனர். இம்முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தல் பெரும் பரபரப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாரும் அமல்படுத்தாத புதிய சலுகைகளை ஆம் ஆத்மி கட்சி கூறியிருப்பதால் மற்ற கட்சிகளும் இதற்கு நிகராக பல அறிக்கைகள் வெளியிடும். அந்த வகையில் 3 கட்சிக்கு இடையே அதிக அளவு போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleரசிகர்களுக்கு பிக்பாஸ் பிரபலம் குட் நியூஸ்!
Next articleதொற்று பாதிப்புகள் குறைவு! தகர்க்கப்படும் தளர்வுகள்?