திரையுலகிலிருக்கும் முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் பலர் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் பணத்தை முதலீடு செய்ய வைக்கும் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் விளம்பரங்களில் நடிப்பது இயல்பாகிவிட்டது. ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது குறித்து அரசியல் கட்சிகளிடையே பல எதிர்ப்பு கிளம்பியது.
அச்சமயத்தில் நடிகர்கள் இவ்வாறான விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தினர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற கிரிப்டோ கரன்சி விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து நாடு முழுவதும் முதலீட்டாளர்கள் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் நாளடைவில் தான் இந்த நிறுவனம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது பண மோசடி வழக்கு தொடுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் காவல்துறையினர் தற்பொழுது தமன்னாவிடம் விசாரணை நடத்தியுள்ளது.
கிட்டத்தட்ட தமன்னாவிடம் அமலாக்க துறையினர் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகவே விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் தமன்னா மீது எந்த ஒரு குற்றச்சாட்டு இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.