ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?

Photo of author

By Rupa

ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக??

ஜேசிடி பிரபாகரன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் என கூறியது.அதேபோல  அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதின் பேரில் பல ஊழல்கள் வெளிவந்தது. இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீது பல வழக்குகள் குவிந்துள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி திமுகவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசி வருகிறார்கள் என்ற தகவலை ஜேசிடி பிரபாகரன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தலைமை செயலகத்தில் கருணாநிதியை புகழாரம் சூட்டி ஓ பன்னீர்செல்வம் அவர்களை பேச சொல்லியதே எடப்பாடி தான் என்ற தகவலையும் வெளியிட்டார். அதனையடுத்து ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் ஒன்று உள்ளது. ஓ பன்னீர்செல்வம் அனுமதி அளித்தால் அந்த ரகசியத்தை கூறுவேன். இந்த 41 ஆயிரம் கோடி ரகசியத்தில் பலர் சிக்கி உள்ளனர் என்றவாறு கூறினார். இவ்வாறு இவர் கூறியதும் இந்த பணம் எல்லாம் யாருடையது எதற்கு பயன்பட்டது என்ற பாணியில் பலர் கேள்வி எழுப்பினர்.

தற்பொழுது இது குறித்து மார்க் இஸ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியத்தை கட்டாயம் வெளியிட வேண்டும். இவ்வளவு பெரிய தொகை யாருடையது? அந்தத் தொகைக்கு என்று ஏதேனும் கணக்கு உள்ளதா? வருமான வரி செலுத்தப்பட்டதா என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தமிழக அரசு கடைப்பில் போடாமல் இந்த 41,000 கோடி ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுள்ளார்.