ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!

0
100

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபுறம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துவிட்டு, இந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்களை கண்டிக்காமல் இருக்கிறார். முதல்வரின் இந்த நடவடிக்கை ஏமாற்று நடவடிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்று சொல்லியது பெண்கள் முகம் சுளிக்கும் விதத்தில் இருப்பதாக கூறிய அவர், பெண்கள் பேருந்தில் ஏறினாலே ஓசி பயணத்துக்கு வந்து விட்டாயா? என்று ஒரு சிலர் கேட்கும் நிலைக்கு தற்போது ஆளாகியுள்ளனர் ஆகவே பெண்கள் முகம் சுளிப்பதாகவும் வேதனைப்படுவதாகவும் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு வரும்போது மட்டும் அவர்களிடம் நயமாக பேசி அவர்களின் மனதை மாற்றி வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டு, அதன் பிறகு அவர்களையே தூற்றும் விதமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? என்று பல பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் திமுகவின் சுபாவமே இப்படித்தான் இருக்கும் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை அதனை பொதுமக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள். அவர்கள் வாக்களித்த ஒரே காரணத்திற்காக தற்போது அனுபவித்து வருகிறார்கள் என்று சிலர் ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்கள்.

சரி தற்போது நாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இலவச திட்டங்களை இலவசம் என்ற பெயரில் அழைப்பதை கூட தவிர்த்தார். அதற்கு பதிலாக விலை இல்லா திட்டம் என்று பெயரிட்டு அவற்றை செயல்படுத்தினார்.

அந்த நாகரிகம் கூட திமுகவினரிடம் இல்லை. இவர்கள் ஓசி பயணம் என்று தெரிவித்து பொதுமக்களை இழிவுபடுத்தும் செயலில் இறங்கியுள்ளதாக விமர்சனம் செய்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உதயநிதி ரசிகர் மன்றத்திற்கு தலைவராக்கலாம். அதற்குத்தான் அவர்கள் பொருத்தமாக இருப்பார்கள். உதயநிதியை முன்னிறுத்துவதற்காக திமுகவில் இருக்கின்ற மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். கருணாநிதி இருந்த காலகட்டத்தில் ஸ்டாலினை முன்னிறுத்துவதற்காக வைகோ ஓரம் கட்டப்பட்டார்.

தற்போது அதே தான் நடைபெற்று வருகிறது. ஆகவே தான் துணைபு பொதுச்செயலாளர் பதவியில் இருந்த சுப்புலட்சுமி சகதீசன் அந்த பதவியில் இருந்து விலகினார் அமைச்சர் துரைமுருகன் கூட அதிருப்தியில் இருப்பதாக கூறினார் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை திமுக ஆட்சியில் முடக்கி வைத்திருக்கிறார்கள். இதனை செயல்படுத்தினால் எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் முடக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களின் இது போன்ற செயல்பாடுகள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அநீதிக்க வேண்டிய சங்க கவசத்தை வைத்திருக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்றும் நாங்கள் தான் அதிமுக அந்த தங்க கவசம் எங்களிடம் தான் வரும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.