இத்தனை SIM கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் ரூ.50 லட்சம் அபராதம் + 3 ஆண்டுகள் சிறை!! 

Photo of author

By Divya

இத்தனை SIM கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் ரூ.50 லட்சம் அபராதம் + 3 ஆண்டுகள் சிறை!!

இன்றைய காலத்தில் ஒருவரிடம் இரண்டுக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருப்பது போல் சிம் கார்டுகள் எண்ணிக்கை தெரியாத அளவிற்க்கு பயன்படுத்தப்படுகிறது.தனி நபர் ஒருவரிடம் அதிக சிம் கார்டுகள் இருப்பது குற்றச்செயல்களுக்கு வழிவகை செய்யும்.பெரும்பாலும் பண மோசடியில் ஈடுபடுபவர்களே அதிக எண்ணிக்கையிலான சிம் கார்டுகள் பயன்படுத்துகின்றனர்.

பணமோசடி,ஆன்லைன் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தனி நபருக்கான சிம் கார்டு எண்ணிக்கைக்கான டெலிகாம் சட்டம் கடந்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது.இதன்படி ஒரு நபர் ஆதாருடன் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை மட்டுமே பெற வாங்க முடியும்.

ஒருவேளை உங்களிடம் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருந்தால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று டெலிகாம் சட்டம் கூறுகிறது.9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு முதல் முறை அபராதம் விதிக்கப்படும்.சட்டத்தை மீறி அதிகப்படியான சிம் கார்டுகளை வாங்கினால்
ரூ. 2 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை அபாரதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

உங்கள் பெயரில் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் இருந்தால் எப்படி டிஆக்டிவேட் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

முதலில் https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.பிறகு “Know your mobile connection” என்பதைக் கிளிக் செய்யவும்.அதன் பின்னர் உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்ச்சாவை பதிவு செய்யவும்.இவ்வாறு செய்த உடனே தங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.பின்னர் உங்கள் என்னுடன் தொடர்புடைய சிம்கார்டு எண்கள் ஷோ ஆகும்.பிறகு தங்களுக்கு தேவைப்படாத மொபைல் நம்பரை பிளாக் செய்ய வேண்டும்.இல்லையேல் நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் சிம் கார்டை உங்கள் ஆப்ரேட்டரின் உதவியுடன் துண்டித்து விடலாம்.