இவர்களுக்கு ரூ 5,000 ஊக்கத்தொகை! நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்றால் அனைத்து நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் மக்கள் தங்கள் வேலைகளை செய்ய முடியாமல் வீட்டினுள்ளே முடங்கிக் கிடந்தனர். மேலும் வியாபாரம் ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பெரும் இழப்பை சந்தித்தது. இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. இவ்வாறான கொரோனா பெருந்தொற்றின் போதும் பல அரசு ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களின் பங்கு இன்றியமையாதது. எனவே பல நாடுகள் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என பல சலுகைகளை அளித்தது.
அந்த வகையில் நமது இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அவ்வாறு இருக்கையில் தற்போது இலங்கை அரசும் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ரூ 5,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டு சிரமப்பட்டு வருகிறது. இதனால் பல பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு இலங்கை அரசு தற்போது 23 ஆயிரம் கோடி ரூபாயை பொருளாதார ஊக்கத்தொகையாக வழங்கும் திட்டம் மூலம் ஊழியர்களுக்கு வழங்க உள்ளனர்.அதனால் அரசு ஊழியர்கள் ரூ 5,000 சிறப்பு ஊக்கத் தொகையாக பெறுவர்.இத்திட்டம் அமலுக்கு வரும் என இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே கூறியுள்ளார். இதனால் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ 10,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்தோடு தோட்ட பயிர் ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ 15 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.