தப்பிக்க முயன்ற ராஜேந்திர பாலாஜி! சம்பவ இடத்தில் நடந்தது என்ன?

0
105
Rajendra Balaji tried to escape! Folded cops! What happened at the scene?
Rajendra Balaji tried to escape! Folded cops! What happened at the scene?

தப்பிக்க முயன்ற ராஜேந்திர பாலாஜி! சம்பவ இடத்தில் நடந்தது என்ன?

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக செய்த தவறுகளை வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியது. முதலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தினர். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தினர்.

அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சி நடைபெற்ற வந்தபோது பல திட்ட பணிகளில் எஸ் பி வேலுமணி மோசடி செய்ததாகவும் கூறினர். அதேபோல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. புகார் வந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

போலீசார் பல மாநிலங்களிலும் தொடர்ந்து தேடி வந்தனர். மேலும் மோசடி செய்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்குபேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் தலைமையில் 8 தனிப்படை தேடி வந்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதனை அறிந்த போலீசார் பதுங்கியிருந்த ராஜேந்திரபாலாஜி கண்டறிந்து சுற்றிவளைத்தனர். காவல்துறையின் வாகனத்தை பார்த்ததும் காரில் ஏறி சென்று தப்பிக்க செல்ல முயன்ற ராஜேந்திரபாலாஜியை  போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தற்பொழுது ராஜேந்திர பாலாஜி ஹாசன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார். அதனை அடுத்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து தனிப்படை வைத்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.