இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000!! பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!
தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதலில் பொது காலாண்டு தேர்வு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக கொடுத்த தேதியில் தேர்வுகளை முடிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டது.அதன்பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும் அளித்துள்ளனர்.
சமீபத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் மழலை பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. தற்பொழுது வரை தமிழகத்தில் 2381 மழலை பள்ளிகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளிகள் மூடப்படும் எனக் கூறி வந்த நிலையில், இந்தப் பள்ளிகள் அனைத்தும் இந்த கல்வியாண்டு முதல் தொடர்ந்து இயங்கும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இந்த பள்ளிகளில் பணியாற்ற தற்காலிக ஆசிரியர்கள் 2381 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அவர்களுக்கு பிழைப்பூதியம் என்ற வகையில் ரூ .5000 மாதம் தோறும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அரசு நடத்தி வரும் மழலை பள்ளிகள் மூடப்படும் என்று கூறிவந்த நிலையில் பள்ளிக்கல்வி துறையின் இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.