போக்குவரத்து துறை வழங்கும் ரூ.50,000 பரிசுத்தொகை!! பஸ்ஸில் பயணம் செய்தால் போதும்!!

Photo of author

By Gayathri

தமிழக போக்குவரத்து கழகம் ஆனது பேருந்தில் பயணம் செய்யக்கூடிய அதாவது முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயணர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயனர்கள் இன்றி வார நாட்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயணங்களை கணினி குழுக்கள் மூலம் 3 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கி வந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் நிறைய பயனர்கள் பயன்பெற வேண்டும் என முடிவு செய்து இந்தத் திட்டத்தினை விரிவு செய்து இருக்கிறது.

இதன் மூலம் வார நாட்களில் நீண்ட தூர பயணத்திற்கு முன்பதிவு செய்து செல்லக்கூடிய 13 பயணிகளை தேர்ந்தெடுத்து முதல் 3 பேருக்கு தலா 10,000 ரூபாயும் மீதமுள்ள 10 பேருக்கு தலா 2000 ரூபாயும் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான 13 பயனர்களை கணினி குழுக்கள் மூலம் தேர்வு செய்து விட்டதாகவும் சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.