தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ. 12000 ரூபாயிலிருந்து ரூ. 18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைப் போலவே, மத்திய மற்றும் மணிலா அரசு பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.இதில் பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு 3 தவணையாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
குழந்தை பிறந்த பின் குழந்தையை பெற்றெடுத்தவருக்கு போதுமான ஓய்வு மற்றும் நல்ல உணவு வேண்டும் என்பதால் இந்த தொகை வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
முதல் குழந்தைக்கு இரண்டு தவணையாக ரூ.5000 மற்றும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஒரே தவணையாக பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த விண்ணப்பங்களை தங்களது வீட்டின் அருகில் உள்ள அங்கன்வாடி நிலையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.