10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!!
தற்பொழுது மகளிர் உரிமை தொகையாக மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் பல்வேறு வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையாக 7000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :-
✓ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
✓ முகவரி சான்றிதழ்
✓ வயது சான்றிதழ்
✓ ஆதார் அட்டை
திட்டத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 70 வயது வரை இருக்கக்கூடிய பெண்கள் தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.” பீமா சகி யோஜனா ” திட்டத்தின் கீழ் செயல்படும் LIC நிறுவனமானது இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைக்கும் பெண்கள் https://licindia.in/hi/test2 என்ற அரசனுடைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டாயமாக ஹிந்தி மொழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.