பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ம், பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.400 ம், பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படும் என இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு உரிய தகுதிகள் பின்வருமாறு,
மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கு தகுந்தவாறு உதவித்தொகை மாறுபடும். விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முதலான ஆண்டுப்படி காலாண்டு முடிவில் விண்ணப்பிப்பவர் வேலைவாய்ப்பு முகாமில் 5 வருடங்களுக்கு குறையாமல் கணக்கை புதுப்பித்து வேலைகளுக்கு காத்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரமுக்கு மேல் இருக்கக் கூடாது. விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு அதிகபட்சமாக 40. பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் ( எஸ்.சி/ எஸ்.டி ) பிரிவினருக்கு வயது வரம்பு அதிகபட்சமாக 45. விண்ணப்பதாரர் அவருடைய கல்வி படிப்பை தமிழ்நாட்டில் மட்டும் முடித்திருக்க வேண்டும் அல்லது அவருடைய பெற்றோர்/ காப்பாளர் குறைந்தது 15 வருடமாவது தமிழகத்தில் வசித்து வந்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர் நடப்பாண்டு மாணவர்களாக கண்டிப்பாக இருக்கக்கூடாது போன்ற பல நெறிமுறைகள் இத்திட்டத்திற்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும், விண்ணப்பதாரர் தகுதி உடையவராயின் அவருடைய இந்த உதவித் தொகையினால் அவருக்கு வேலை வாய்ப்பு முகாம் மூலம் கிடைக்கும் வேலைகளுக்கு எந்தவொரு பின் தளர்வும் இருக்காது எனவும் வலியுறுத்தியுள்ளது.