மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி அனைத்தும் உயர்ந்தது. இந்நிலையில் சில மாத முன் திமுக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இந்த மின்கட்டண உயர்வானது பாமர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின் கட்டண உயர்வை அடுத்து பல ஊர்களில் ஆங்காங்கே பல புகார்கள் எழுந்த வண்ணமாக தான் இருந்தது.
குறிப்பாக குறைந்த அளவில் மின்சாரம் உபயோகம் செய்திருந்தாலும் கூட அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறு தான் தற்பொழுது நெல்லை மாவட்டம் பகுதியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் தான் முகமது. இவர் அரசு வழங்கிய மானியத்தின் மூலம் பசுமை வீடு கட்டி உள்ளார். எப்பொழுதும் இவர் வசிக்கும் வீட்டிற்கு மின்கட்டணம் வராது.
திடீரென்று இவர் செல்போன் எண்ணிற்கு ரூ. 91 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்ட முஹம்மது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதனை ஐந்தாம் தேதிக்குள் கட்டுமாறு கூறியுள்ளனர். மேலும் இது குறித்த அவர் புகார் அளித்துள்ளார், மாதம் ரூ 65 மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்ததாகவும் தற்பொழுது 91 ஆயிரம் வந்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரை பெற்ற அதிகாரிகள் ஏதேனும் தொழில்நுட்ப தவறுதலால் இவ்வாறு தொகை கட்டுவதற்கான குறுஞ்செய்தி வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.