ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

0
238
RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!
RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் நிர்வாகத்தினர் பலர் அக்டோபர் இரண்டாம் தேதி அணிவகுப்பாக ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கட்டுப்பாடுகளுடன் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூட அக்டோபர் இரண்டாம் தேதி சமூக நல்லிணக்க பேரணி நடத்த இருப்பதாக திருமாவளவன் கூறினார். திருமாவளவன் கூறியதற்கு பல இடதுசாரி கட்சிகளும் ஆதரவு வழங்கினர். ஆனால் தமிழக காவல்துறை இந்த ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால் நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியது. இவ்வாறு இருக்கையில் ஏன் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளோம் என்பதை தமிழக அரசு விளக்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றால் சட்ட ஒழுங்கானது சீர்குலையும். தற்பொழுது பிராண்ட் ஆப் இந்தியாவின் நிறுவனத்தை மத்திய அரசு முடக்கிய நிலையில், ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றால் மத  கலவரம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கை காக்க ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட அனைத்து வகையாக ஊர்வலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Previous articleவேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்!
Next articleகலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!!