உச்சந்தலையில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? அட இது தெரியமா போச்சே!
நம் இந்தியர்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை காலம் காலமாக செய்து வருகின்றனர்.இதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் ஆகும்.
தலைக்கு எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும்.ஆனால் அதன் அருமை என்னவென்று இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை.எண்ணெய் வைத்து தலை வாரினால் அழகு முக அழகு போய்விடும் என்று தினமும் தலைக்கு குளித்து முடியின் ஆரோக்கியத்தை இழக்கச் செய்கின்றனர்.
தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க விரும்பாதவர்கள் தலைக்கு குளிக்கும் முன்பு சிறிது விளக்கெண்ணெய் வைத்து குளித்தாலே பல வித நன்மைகளை பெற முடியும்.
விளக்கெண்ணெய் குளிர்ச்சி நிறைந்த ஒன்று.இவை உடலில் உள்ள சூட்டை உறிஞ்சி எடுத்து விடும்.இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து ஊறவிட்டு குளித்து வந்தால் கண் எரிச்சல் சரியாகும்.
இந்த எண்ணெய் குளியலால் கண் பார்வை தெளிவாகும்.உடல் சோர்வு மற்றும் சரும பிரச்சனை சரியாகும்.
விளக்கெண்ணெயில் உள்ள ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம் உடல் வறட்சியை தடுக்கிறது.முக பருக்களை நீக்கி முகத்திற்கு ஒரூஉ பொலிவு கொடுக்கிறது.