வெளியான மூன்றே நாட்களில் வசூல் சாதனை செய்த ருத்ர தாண்டவம்.!!

0
190

ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம்.

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

திரௌபதி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மோகன்ஜி இயக்கியுள்ள திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். இந்த படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன், தம்பி ராமையா, ராதாரவி, மனோபாலா உள்ளிட்ட பலரும் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் போதைப் பொருள் உபயோகித்தல், மதமாற்ற கும்பல்களின் கொடூர முகம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவிகள் மீது வழக்கு தொடுப்பது மற்றும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை அப்பட்டமாக வெளி காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் ருத்ரதாண்டவம் திரைப்படம் நல்ல வசூலை செய்து வருகிறது.இந்நிலையில், ருத்ரதாண்டவம் திரைப்படம் இதுவரை 7. 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஅடை மொழியை மாற்ற முயற்சி செய்யுங்கள்! ஆலோசனை வழங்கிய பூங்குன்றன் மகிழ்ச்சியில் சசிகலா!
Next article12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி! தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!