நடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டுவதற்காக நரேந்திர மோடி அவர்கள் சென்றிருந்தார். அப்பொழுது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடியின் காரை சிலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர். அங்கிருந்து மோடி அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்லாமல் விமான நிலையத்திற்கு சென்றார். ஒரு மணி நேரம் ஆக அந்த போராட்ட களத்தில் நரேந்திர மோடி அவர்கள் சிக்கிக் கொண்டார். பிரதமர் வரும் பாதை முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றே தெரிந்ததே.
அவ்வாறு இருக்கையில் எவ்வாறு போராட்டக்காரர்கள் வந்து முற்றுகையிட்டனர் என்ற பெரும் கேள்விகள் பஞ்சாப் மாநில அரசை எதிர்த்து கேட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ட்விட்டர் பக்கத்தில் வி ஸ்டேன்ட் வித் மோடி என்ற ஹாஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்திய பூப்பந்து விளையாட்டு வீராங்கனை சாய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் எந்த ஒரு நாடும் தனது பிரதமரின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருக்கும் வேளையில் தங்களது நாடும் பாதுகாப்பாக தான் இருக்கிறது என்று கூற முடியாது இவ்வாறான கருத்துக்களை சாய்னா கூறியிருந்தார்.
சாய்னாவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு ,நடிகர் சித்தார்த் சாய்னாவை இழிவுபடுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவானது தற்பொழுது வைரலாகி பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. சித்தார்த் பதிவிட்ட டிவிட்டர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து ருத்ர தாண்டவம் பட இயக்குனர் மோகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். சித்தார்த் இவ்வாறு டிவிட்டரில் பதிவு செய்துள்ளது முட்டாள்தனமான ஒன்று. வெற்றியாளர்களை இவ்வாறு அவமதிப்பது தவறானது என நடிகர் சித்தார்த் க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அவரைத் தொடர்ந்து பலரும் சித்தர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.