தொடர்ந்து இந்திய அணியில் ஒதுக்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் !! சி எஸ் கே தான் காரணமா??

Photo of author

By Vijay

Cricket: தொடர்ந்து இந்திய அணியின் போட்டிகளில் ஒதுக்கப்படும் சி எஸ் கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
தற்போது இந்திய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதனை அடுத்து பரதர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது இதற்கான அணி பட்டியல் நேற்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா உடனான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது. இதற்கான அணி பட்டியல் நேற்று வெளியானது. இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், அபிசேக் சர்மா,சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா , அக்சர் பட்டேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைசாக், ஆவேஷ் கான் மற்றும்  யஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாபிரிக்கா டி 20 தொடர் இந்த இரண்டு போட்டிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்.  இவர் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த அணி பட்டியலில் இடம் பெறவில்லை. இதனை தொடர்ந்து டி 20 போட்டியிலும் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு டி 20  போட்டிகளில் இடம்பெற்ற ருத்ராஜ் இந்த ஆண்டு எந்த போட்டியிலும் இடம்பெறவில்லை. நல்ல பார்மில்  இருந்தும் அவருக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பதுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.