IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருத்ராஜ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 5 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோத இருக்கிறது. இதுபோன்ற சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ருத்ராஜ் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏற்கனவே தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்பொழுது காயம் காரணமாக CSK கேப்டன் ருத்ராஜ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது வருத்தத்தை அளிக்க கூடியதாக அமைந்துள்ளது. எனினும் CSK அணிக்கு 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்த தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றிருக்கிறார்.
இதுகுறித்து CSK தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்திருப்பதாவது :-
ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் விளையாடும் பொழுது ருத்ராஜ் ராஜஸ்தான் வேகுபந்துவீச்சாளர் சோப்ரா வீசிய பந்தில் காயமடைந்துள்ளதாகவும் இதனால் அவருடைய முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் விலகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் CSK அணிக்கு மீண்டும் எம் எஸ் தோனி கேப்டன் பதவி வகிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இதே போன்று ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்த பொழுது அவரும் காயத்தால் தொடரை விட்டு விலகியதால் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். மீண்டும் அதே போன்ற ஒரு சூழல் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.