பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் சவுரவ் கங்குலி.
இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் முன்னேறிய பொருளாதார வசதியோடு முன்னிலையில் உள்ளது பிசிசிஐ. பிசிசிஐ –ன் 39 ஆவது தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி. அதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து வரும் நிலையில் வரும் செப்டம்பரோடு அவர் பதவி முடிவடைவதாக சொல்லப்படுகிறது.
அவர் பதவி காலத்தில் பிசிசிஐக்கும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்து, கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பிரச்சனைகளை கங்குலி சரியாக அனுகவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் தற்போது கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக ஒரு போலியான செய்தி சமூகவலைதளங்களில் பரவியது. பிசிசிஐயின் லோகோவைக் கொண்ட பிசிசிஐஐ என்ற ட்விட்டர் ஹேண்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) “செய்தி: திரு. சௌரவ் கங்குலி தனிப்பட்ட காரணங்களுக்காக பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். @SGanguly99 அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள். திரு. . ஜெய் ஷா புதிய பிசிசிஐ தலைவர்.” என்று கூறியிருந்தது. இந்த போலி செய்தியை பலரும் உண்மை என நம்பிவிட்டனர். ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.