திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தையுடன் ஓட்டம்! கள்ளக்காதல் விவகாரமா போலீசார் விசாரணை!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி ஆம்பூர் கல்யாண சுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்ராசு பிற வேலாயுதம் இவரது மனைவி ஷீலா தேவி (30). அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். லோகேஸ்வரி (10) மற்றும் திவ்யஸ்ரீ (07). சின்ராசு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது சீலா தேவியின் டெலிபோன் இருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அந்த அழைப்பை எடுத்து பேசிய ஷீலா தவறான எண்ணென்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சின்ரா செல்போனில் வந்த அழைப்பை எடுத்து  சீலாவிடம் கேட்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஆரம்பித்தது. இந்நிலையில் அவர் பணி நிமித்தமாக  திருப்பூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது சீலா தேவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு சின்ராசு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைதெரிவித்தார்.

மேலும்   அந்த புகாரின் பேரில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மணப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் உடன் ஷீலா தேவிக்கு  கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. அந்த கள்ளத்தொடர்பின் காரணமாக தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளோடு சீலா தேவி சேகர் உடன் சென்றிருக்கலாம் என்று அடிப்படையில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.