மூக்கில் சளி வழிகிறதா? இதை ஸ்டாப் செய்யும் மூலிகை கஷாயம் இதோ!!

Photo of author

By Gayathri

தற்பொழுது பனி காலம் தொடங்கிவிட்டதால் சளி,காய்ச்சல்,இருமல் போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.டீ,காபிக்கு பதிலாக வெற்றிலை,துளசி போன்றவற்றை வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

1)துளசி
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு கால் கைப்பிடி துளசி இலையை உரலில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.

இந்த துளசி சாறை அடுப்பில் வைத்துள்ள நீரில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.துளசி பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த துளசி பானத்தை ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகுங்கள்.சர்க்கரை,வெல்லம் போன்றவற்றை சேர்க்கக் கூடாது.இந்த துளசி பானத்தை பருகி வந்தால் சளி தொந்தரவு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)வெற்றிலை
2)மிளகு
3)பூண்டு

செய்முறை விளக்கம்:

உரலில் இரண்டு காம்பு நீக்கிய வெற்றிலை சேர்த்து இடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் நான்கு மிளகு,ஒரு பல் தோல் நீக்கிய பூண்டு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.வெற்றிலை கஷாயம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

இந்த வெற்றிலை கஷாயத்தை காலை,மாலை பருகி வந்தால் மார்பில் படிந்துள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேறிவிடும்.