russia: செக்ஸ் அமைச்சகம் அமைக்க திட்டுமிட்டு வருகிறது ரஷ்யா அரசு ஹனிமூன் செல்வோருக்கு மானியம் வழங்க திட்டம்.
பணவீக்கம் போர் என பல வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது இதற்கு மத்தியில் சீனா இந்தியா ஜப்பான் சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததில்லை. இது அறிந்த பல நாடுகள் இந்த மக்கள் தொகை பிறப்பு விகிதத்தை காப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யாவும் அதற்கு ஒரு முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. ரஷ்ய மக்கள் தொகை குறைப்பை குறைக்க பல விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது “மினிஸ்ட்ரி ஆப் செக்ஸ்” எனப்படும் செக்ஸ் அமைச்சகம் அமைப்பதுதான்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு குழந்தை பருவ குழு தலைவர் நினா ஓஸ்டநீயா என்பவர் தான் இந்த புதிய அமைச்சகத்தை உருவாக்குவது பற்றி கோரிக்கை முன் வைத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியான போர் மேற்கொண்டு வருவதால் கடந்த மூன்று வருடங்களில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.
இந்தப் போரில் அதிகமான இளைஞர்கள் இருப்பதால் இந்த மக்கள் தொகை குறைந்த நிலை நிலவுகிறது. இதை உடனடியாகவும் வேகமாகவும் சரி செய்வதற்காகத்தான் ரஷ்ய அரசு பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளது. இதில் முதலில் ரஷ்ய அரசு செய்த திட்டம் இரவு 10 மணி முதல் 2 மணி வரை இணையத்தை துண்டித்தது. இவ்வாறு துண்டிப்பது மூலம் இரவில் விளக்கு அணைக்கப்படும்.
இதனால் திருமணம் ஆன தம்பதிகள் நெருக்கமாக இருப்பது ஊக்குவிக்கப்படுகிறது. இதை ரஷ்ய நாட்டின் அனைத்து ஆலோசனை செய்து வருகிறது. இளைஞர்களுக்கு நடுவில் திருமணத்தையும், குழந்தை பெற்றுக் கொள்வதும் ஊக்குவிக்கும் வகையில் முதல் ஹனிமூன் க்கு அரசு நிதி உதவி வழங்கவும், புதிதாக திருமணம் செய்தவருக்கு நிதி உதவியும் அளிக்க திட்டமிட்டு வருகிறது.
ரஷ்ய அரசு மேற்கொள்ளும் இந்த வகையான திட்டங்களின் மூலம் ரஷ்ய நாடு மக்கள் தொகை விகிதத்தில் எவ்வளவு அடி வாங்கி உள்ளது என்பது தெளிவாகிறது. மக்கள் தொகை அதிகரிக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.