ரஷ்யாவின் சொத்துக்கள் கைப்பற்றப்படுகிறது!

Photo of author

By Parthipan K

ரஷ்யாவின் சொத்துக்கள் கைப்பற்றப்படுகிறது!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 15 நாட்களை கடந்தும் தொடர்ந்து கொண்டே வருகிறது. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைபற்றி வருகிறது.

இந்த போரின் காரணமாக இந்தியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் சிக்கி உள்ளனர். உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் தீவிர தாக்குதலின் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாடுகளை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த போரினால் அச்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் தினமும் லட்சகணக்கானோர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை இருபது லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் நாட்டினர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட உலக நாடுகள் பல தொடர்ந்து ரஷியாவிடம் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன்மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய சொத்துக்களைக் கைப்பற்றும் சட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டு உள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.