சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு!
சபரிமலை பம்பைக்கு நேற்று மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த்,பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்கதர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்கதர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை மகரவிளக்கு யாத்திரை காலம் நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகின்றது.அதனால் பக்தர்களின் கூட்டம் மற்றும் போக்குவரத்தை சரி செய்ய சுமார் 14000போலீசார் போடப்பட்டுள்ளது.மேலும் 134இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
அதனையடுத்து மூன்று தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் போலீசார் மோட்டார் சைக்கிள்கள் மூலம் ரோந்து பணி மேற்கொள்ளப்படவுள்ளது.தமிழகம் கர்நாடகம் ,ஆந்திரா ,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால் அவர்கள் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய அந்தந்த மாநிலங்களில் இருந்து காவல் துறையினர் பணிபுரிய அனுப்பிவைக்க கோரப்பட்டுள்ளது.
அதனையடுத்து 15 முதல் 20 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட வாகனம் மட்டுமே நிலக்கல்லை தாண்டி பம்பை வரை சென்றுவர அனுமதிக்கப்படும்.இதர தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பாடது என கூறியுள்ளார்.