ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்!

0
126

ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்!

இந்தியா பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர் ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற டிப்ஸை கொடுத்துள்ளார்.

இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. இது எதிரணி பவுலர்களுக்கு அதிர்ஷ்டம் என்று சச்சின் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்த ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுபற்றி அவர் “இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சர்வதேச அளவில் பெரிய ரன்கள் எடுத்துள்ளனர், அவர்கள் இருவரும் திறமையானவர்கள். ஷாகீன் அப்ரிடியை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் கண்டுபிடித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஷாஹீன் அப்ரிடி பந்தை மேலே கொண்டு வந்து பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வர விரும்புகிறார்.

அவர் ஒரு ஆக்ரோஷமான மற்றும் தாக்குதல் பந்து வீச்சாளர். முழுமையாகவும் நேராகவும் பந்து வீச அவர் தன்னைத்தானே பின்வாங்குவார். முன்னதாக, பேட்டர்கள் முதல் சில பந்துகளை கவனிக்க வேண்டும். பந்தில் ஸ்விங் இருந்தால் நேராக விளையாட வேண்டும். அவர்கள் காற்று மற்றும் ஆடுகளத்திற்கு வெளியே உள்ள நிலைமைகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்ய வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Previous articleவிஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்!
Next article“அவர் வந்ததில் இருந்தே இந்தியாவின் பேட்டிங் வேற லெவல் ஆகிடுச்சு…” பாகிஸ்தான் வீரர் புகழாரம்!