அமேசான் பிரைம் கஸ்டமர்களுக்கு அமேசான் பிரைம் பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வந்த நிலையில் அதில் சில கட்டுப்பாடுகளை 2025 புத்தாண்டுகளில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா கால முதல் இந்தியாவில் OTT தளங்களின் வருகை மற்றும் தாக்கம் மக்களிடையே அதிகமாக ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓடிடியின் சந்தை விரிவடைய தொடங்கியது.
உதாரணமாக, தற்பொழுது இந்தியாவில் உள்ள நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, Sun NXT, SonyLiv, ஜியோ சினிமா ஆகியவை முன்னணி ஓடிடி தளங்கள் மக்களிடையே அதிக அளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அமேசான் பிரைமில் புத்தாண்டில் ஏற்பட போகும் புதிய மாற்றம் :-
வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோவை பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
தற்பொழுது அமேசான் பிரைம் பயன்பாட்டில் உள்ள செயல்பாடு ஆனது ஒரு அக்கவுண்டை 10 டிவைஸ் களில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதாகும். ஆனால் வருகிற புத்தாண்டு முதல் இதில் கட்டுப்பாடு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது, இனி அமேசான் பிரைம் லாகினை 5 பேர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க உள்ளதாகவும், மேலும் அமேசான் பிரைமில் இரண்டு டிவிகளில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய மாற்றம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் நீங்கள் 30 நாள்களுக்கு ஒருமுறை மட்டும் 2 டிவைஸ்களை நீக்கிவிட்டு வேறு 2 டிவைஸ்களை லாக்-இன் செய்துகொள்ளலாம். இனி அடிக்கடி டிவைஸ்களை நீக்கிவிட்டு, புதிய டிவைஸ்களை இணைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.