இனி ரயிலிலும் பெண்களுக்கு பாதுகாப்பு!! பெட்டிகள் மாற்றியமைப்பு ரயில்வே அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! 

Photo of author

By Jeevitha

இனி ரயிலிலும் பெண்களுக்கு பாதுகாப்பு!! பெட்டிகள் மாற்றியமைப்பு ரயில்வே அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து பல மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் பல வட மாநிலங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தினமும் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து புற நகர  பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் ரயில் சேவைகளை பயன்படுத்தி 10 லட்சத்திற்கும் மேல் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் பெண்களுக்கு வசதியாக இருக்க இரண்டு பேட்டிகள் உள்ளது.

மேலும் பெண்களுக்கு எதிராக பல சம்பவங்கள் ரயில் நடைபெறுவதாக புகார் அடிக்கடி வந்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே கொட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

அந்த ஆலோசனியின் பொது பெண்கள் பாதுக்கப்பு மேம்படுத்த பல்வேறு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு. மேலும் இது குறித்து தாம்பரம், ஆவடி, வேளச்சேரி பணிமனை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டக்கப்பட்டது. மேலும் மூத்த அதிகாரிகள் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பி வைத்தனர்.

அந்த அறிக்கையில் பெண்களுக்கு பாதுக்காப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பெட்டிகளின் நடுப்பகுதியில் இரு பேட்டிகள் சேர்ந்து ஒதுக்கீடு செய்ய உள்ளது. அதனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் அறிவிப்புகளை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.